தேவையானவை
- மைதா – 2 கப்
- முட்டை – 1
- பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்யும் முறை
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், சர்க்கரைப் போட்டு நன்கு கலக்கவும்.
- பிறகு மாவிற்கு நடுவில் ஒரு குழியை ஏற்படுத்தி, அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- மாவைக் கைகளால் நன்கு பிசைந்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
- பிசைந்த மாவின் மீது எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்.
- ஊறிய மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு அதன் மீது நெய்யை தடவை சப்பாத்தியை உருட்டி மீண்டும் உருளையாக்கி அதனை பரோட்டாவாக திரட்டவும்.
- தோசைக் கல்லில் பரோட்டாவைப் போட்டு இரண்டு பக்கமும் சிவக்குமாறு எண்ணெய் ஊற்றி எடுக்கவும்.
- இதன் சுவை புதுமையாக இருக்கும். செய்து சுவைத்துப் பாருங்கள்.



0 comments:
Post a Comment