Thursday, January 3, 2013

காலிபிளவர் சப்பாத்தி


தேவையான பொருட்கள்:
  • காலிபிளவர் – சிறிய பூ – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • மிளகாய்தூள் – அரை ஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் – கால் ஸ்பூன்
  • நறுக்கிய மல்லித்தழை – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • சர்க்கரை – அரை ஸ்பூன்
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
  • உப்பு – 1 ஸ்பூன்.
மாவு பிசைவதற்கு:
  • கோதுமை மாவு – 1 டம்ளர்
  • சோயா மாவு – அரை டம்ளர்
  • வெண்ணை – 50 கிராம்
  • உப்புத்தூள் – 1 ஸ்பூன்.
செய்முறை:
  • முதலில் மாவுகளை சலித்து வெண்ணையையும், உப்பையும் சேர்த்து, சிறிது பாலையும் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.
  • காலிபிளவரை துருவி வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை வெடிக்கவிட்டு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
  • பிறகு காலிபிளவரை சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
  • பின்பு சர்க்கரையை சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்க வேண்டும்.
  • மாவை சப்பாத்தி இடும் அளவில் உருண்டைகள் செய்து வட்டமாக இட்டு, மசாலா உருண்டைகளாக வைத்து, ஸ்டப்டு செய்து வட்டமாக இட்டு சுட்டு எடுக்க வேண்டும்.
  • மாலை டிபனுக்கு மயக்கும் சுவை கொண்ட இதனை செய்தால் சாப்பிடும் மனிதர் மகிழ்வ

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More