தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 3கப்
வெள்ளிரிக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
- முதலில் வெள்ளிரிக்காயை நன்கு அலசி தோலையையும் உள்ளே உள்ள விதையையும் எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். ( வெள்ளிரிவிதையை தூக்கி போடாமல் தயிர் பச்சடியில் சேர்க்கலாம். அல்லது அதனை காயவைத்து பாயாசம், இனிப்பு வகை உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.)
- வாய்அகன்ற பாத்திரத்தை எடுத்து கோதுமை மாவு, உப்பு, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் தண்ணீருக்கு பதிலாக தேவையான அளவு அரைத்த வெள்ளிரிக்காய் விழுதை சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை 1/4 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திக்கல்லில் சிறு எண்ணெய்க்கு பதிலாக சப்பாத்தி மாவை தூவி உருட்டிய மாவை வட்டவடிவத்தில் நன்கு தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்த சப்பாத்தி மாவை எடுத்து அதில் வைத்து இருபுறமும் எண்ணெய்யில்லாம் வேகவிட்ட பின்பு இருபுறமும் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்நிறம் வந்தவுடன் ஹாட்பாக்ஸில் வைத்து சேகரித்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
- சுவையான வெள்ளிரிக்காய் சப்பாத்தி தயார்.



0 comments:
Post a Comment