Tuesday, January 1, 2013

உப்பு பிஸ்கட்டுகள்

தேவையான பொருட்கள்

  • மைதா மாவு - 200 கிராம்
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • அமோனியா - முக்கால் தேக்கரண்டி
  • பொடித்த சர்க்கரை - 50 கிராம்
  • தண்ணீர் - 50 மில்லி
  • வனஸ்பதி - 75 கிராம்
 செய்முறை
  • அமோனியா, உப்பு, சர்க்கரை மூன்றையும் 50 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
  • வனஸ்பதியை குழைக்கவும்.
  • சலித்த மாவை சேர்த்து அமோனியா உப்பு கலந்த தண்ணீரை சேர்த்து பூரி மாவு போல பிசையவும்.
  • அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் அச்சினால் அரை அங்குல பருமனுக்கு வெட்டவும்.
  • முள்கரண்டியினால் இலேசாக மேலே குத்தவும்.
  • பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் வரிசையாக வைத்து 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More