Tuesday, January 1, 2013

நட்ஸ் குக்கிஸ்

தேவையான பொருட்கள்

  • மைதா - 350 கிராம்
  • வெண்ணெய் - 350 கிராம்
  • சர்க்கரை - 80 கிராம்(பொடித்தது)
  • கிரீம் அல்லது கெட்டியான பால் ஏடு - 4 மேசைக்கரண்டி
  • பொடித்த முந்திரிப் பருப்பு - 25 கிராம்
  • பொடிக்காத சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
  • வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சேர்த்து மிருதுவாக குழைக்கவும்.
  • பால் ஏடு அல்லது க்ரீம் சேர்க்கவும்.
  • சலித்த மைதா மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும்.
  • நன்றாக மிருதுவாக ஆனவுடன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  • மாவு ஜில்லென்று ஆனவுடன் கால் அங்குலத்திற்கு கனமான அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
  • நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வரிசையாக வைக்கவும்
  • இலவங்கப்பட்டை பொடி, சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி மூன்றையும் கலந்து மேலே தூவவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More