Tuesday, January 1, 2013

கிரீம் பிஸ்கட்டுகள்

தேவையான பொருட்கள்


  • சர்க்கரை - 60 கிராம்
  • வெண்ணெய் - 60 கிராம்
  • மைதா மாவு - 80 கிராம்
  • கஸ்டர்ட் பவுடர் அல்லது கார்ன் ஃப்ளார் - 45 கிராம்
  • வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
  • முட்டை - பாதி
  • பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்க:
  • வெண்ணெய் - 30 கிராம்
  • சர்க்கரை நைசாக பொடித்தது - 60 கிராம்
செய்முறை
  • பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
  • மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து, பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும் சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
  • மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
  • பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
  • இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More