Tuesday, January 1, 2013

சீஸ் பிஸ்கட்டுகள்

தேவையான பொருட்கள்
  • வெண்ணெய் - 90 கிராம்
  • துருவிய சீஸ் - 60 கிராம்
  • மைதாமாவு - 120 கிராம்
  • மிளகாய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
  • உப்பு - அரைத் தேக்கரண்டி
 செய்முறை
  • வெண்ணெயையும், சீஸையும் நன்றாகக் குழைக்கவும்.
  • சலித்த மாவு, உப்பு, மிளகாய் பொடியையும் குழைத்த கலவையுடன் சேர்த்து மூன்றையும் கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
  • கால் அங்குல பருமனுக்கு பெரிய அப்பளமாக இடவும்.
  • பிறகு பிஸ்கட் வெட்டும் அச்சினால் வெட்டவும்.
  • நடுவில் முள் கரண்டியினால் மெதுவாகக் குத்தவும்.
  • நெய் தடவி மாவு தூவிய தட்டில் வைத்து 15 இருந்து 20 நிமிடம் வரை 380 டிகிரி F சூட்டில் பேக் செய்யவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More