Tuesday, January 8, 2013

வெண்டைக்காய் புளிக்குழம்பு


தேவயான பொருட்கள்:-
வெண்டைக்காய்                          -200 கிராம்
கடுகு                                     -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு                            -1 டீஸ்பூன்
உப்பு                                      -தேவையான அளவு
மஞ்சள்பொடி                               -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்                            -1/8 டீஸ்பூன்
சாம்பார்பொடி                               -1 டேபிள்ஸ்பூன்
புளி                                         -ஒரு சிறிய எலுமிச்சை அளவு
எண்ணைய்                                  -1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்                               -1
கறிவேப்பிலை                                -5 இலைகள்


செய்முறை:-

 வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து சிறியது பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணைய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து வறுத்த பிறகு அதில் வெண்டைக்காய் துண்டுகள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார்பொடி சேர்த்து நன்றாக வதங்கியதும் புளியை சிறிது நீர் விட்டு ஊறவைத்து எடுத்து கரைத்து வடிகட்டி இத்துடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும். இந்த புளிக்குழம்பு செயவதும் எளிது.மிகவும் மணமாகவும்,ருசியாகவும் இருக்கும். சூடான சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணய் விட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் அல்லது சிப்ஸ் ஏற்றதாக இருக்கும்.

1 comments:

வெண்டைக்காய் புளிக்குழம்பு, கத்தரிக்காய் புளிகுழம்பு, வத்தல் புளிக்குழம்பு போன்ற அனைத்து வகையான புளிக்குழம்பு பற்றி தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/curry-ladies-finger-puli-kulambu_5227.html

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More