தேவையான பொருட்கள்
- ஒட்டு மாங்காய் - 1 (கிளி மூக்கு மாங்காய்)
- வரமிளகாய் தூள் - 5 ஸ்பூன்
- வெந்தயம் - 2 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிறு துண்டு
- கல் உப்பு - தேவயான அளவு
- நல்லெண்ணை - 50 கிராம்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- மாங்காயை தோல் சீவி வாழக்காய் சிப்ஸ் சீவியில் சீவி வைக்கவும்.
- வெந்தயம், பெருங்காயம் இவற்றை எண்ணையில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும்.
- ஒரு இரும்பு கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாயில் நல்லெண்ணை ஊற்றி கடுகு சேர்த்து வெடித்ததும் சீவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மாங்காய் குழையும் வரை வதக்கவும்.
- பின் வரமிளகாய் தூள், பொடித்து வைத்துள்ள வெந்தயம்,பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
- ஆறியதும் கண்ணாடி ஜாடி அல்லது பாட்டிலில் ஸ்டோர் பண்ணவும். லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதத்துக்கு சூப்பரான சைட் டிஷ் .
Posted in: தொக்கு வகைகள்
0 comments:
Post a Comment