Tuesday, January 1, 2013

பூண்டு தொக்கு

தேவையான பொருட்கள்
  • உரித்த பூண்டு - 200 கிராம்,
  • புளி - பெரிய எலுமிச்சை அளவு,
  • மிளகாய்த்தூள் - 50 கிராம்,
  • வெந்தயப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்,
  • துருவிய வெல்லம் - ஒரு டேபிஸ்ஸ்பூன்,
  • கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 செய்முறை
  • புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து... பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், புளிக் கரைசலை விட்டு, நன்றாகக் கெட்டிப்படும் வரை வதக்கவும்.
  • இதில் உப்பு, வெல்லம், மிளகாய்த்தூள் சேர்த்து, ஈரம் வற்றும்வரை கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More