Tuesday, January 1, 2013

வாழைப்பூ பொரியல்

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ - 1
  • காய்ந்த மிளகாய் - 2
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பில்லை - 5 இலை
  • கடுகு - தாளிக்க
  • உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
  • முதலில் வாழைப்பூவினை சுத்தம் செய்யவும். வாழைப்பூவை மேல் தோலை நீக்கி விட்டு அதில் உள்ள சிறு சிறு பூக்களை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பூவின் நடுவில் இருக்கும் நரம்பையும், அதனுடன் உள்ள காம்பினை மட்டும் தனியாக எடுத்து விடவும்.
  • அதன் பின்னர் பூக்களை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளவும்.(சிலர் மோரில் கூட போடுவார்கள் நிறம் மாறாமல் இருக்க)
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் காய்ந்த மிளகாய் , உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்
  • அதன் பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வாழைப்பூவினை போட்டு வதக்கவும்.
  • பிறகு உப்பு சேர்த்து தண்ணீரை அதில் சிறிது தெளித்து மிகவும் குறைந்த தீயில் தட்டு போட்டு மூடி 15 - 20 நிமிடம் வேகவிடவும்
  • இப்பொழுது சுவையான, சத்தான வாழைப்பூ பொரியல் ரெடி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More