Tuesday, January 1, 2013

உருளைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்

  • 1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  • 2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • 4. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • 5. கடுகு - 1/4 தேக்கரண்டி
  • 6. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • 7. உளுந்து - 1/4 தேக்கரண்டி
  • 8. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
  • 9. உப்பு
  • 10. எண்ணெய் - 1 சின்ன குழிக்கரண்டி
  • 11. கொத்தமல்லி, கருவேப்பிலை
  • 12. வெங்காயம் - 1 (நறுக்கியது)
 செய்முறை
  • உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும் (தோல் நீக்க வேண்டியதில்லை)
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • இதில் நறுக்கிய வெங்காயம், உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்ததும், பொடி வகைகளை சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • உருளை வெந்ததும் மூடி இல்லாமல் சிறுந்தீயில் 5 நிமிடம் வைத்து கிளறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More