Tuesday, January 1, 2013

சிக்கன் சாசேஜ் பொரியல்

தேவையான பொருட்கள்
  • சிக்கன் சாசேஜ் - 6 துண்டுகள்
  • பெரிய பல்லாரி - பாதியளவு
  • தக்காளி - பாதியளவு
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • நச்சீரகம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மசாலா தூள் - 1 மேசைக் கரண்டி
  • மிளகு தூள் - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
  • சிக்கன் சாசேஜை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் 1/2 மேசைக்கரண்டி மசாலா தூளை சேர்த்து பிரட்டி வைக்கவும்.
  • பல்லாரி பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ப்ரைபானில் (fry pan) எண்ணெய் ஊற்றி சூடானதும் நச்சீரகம் போடவும்.
  • பின் நறுக்கிய பல்லாரி சிறிது போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  • மீதி இருக்கும் பல்லாரி, தக்காளி, மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதில் மீதி இருக்கும் மசாலாதூள், மிளகு, சோம்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய sausage -ஐ சேர்த்து நன்றாக பிரட்டவும்.
  • மிதமான தீயில் நன்றாக வதக்கி வெந்ததும் இறக்கி விடவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More