Thursday, January 3, 2013

வரகரிசி சர்க்கரை பொங்கல்


தேவையான பொருட்கள்:
  • வரகரிசி -​ 250கிராம்
  • பாசிபருப்பு-50கிராம்
  • வெல்லம்-300கிராம்
  • முந்திரி-25கிராம்
  • திராட்சை-25கிராம்
  • நெய்-2 தேக்கரண்டி
  • பால்-1 கப்
  • தேங்காய் -தேவையான அளவு
  • ஏலக்காய் பொடி-சிறிதளவு
  • உப்பு-அரை தேக்கரண்டி

செய்முறை:
  1. வரகு அரிசியைப்,​​ பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும்.
  2. தண்ணீரை கொதிக்க வைத்து,​​ வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.
  3. பின்னர்,​​ வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.
  4. வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,​​ வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு,​​ நன்கு கிளறி கொதிக்க விடவும்.
  5. பின் அதில் வறுத்த முந்திரி,​​ திராட்சை ,​​ ஏலக்காய் பொடி,​​ தேங்காய்,நெய்,​​ மில்க் மெய்ட் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
  6. சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் ரெடி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More