Tuesday, January 1, 2013

இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்
  • புளி - லெமென் சைஸ்
  • தக்காளி - ஒன்று
  • துவரம் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி (வேக வைத்தது)
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • வறுத்து அரைக்க:
  • நெய் - ஒரு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - ஒன்று
  • மிளகு - 9
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது
  • பூண்டு - இரண்டு பல்
  • முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
  • தாளிக்க:
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்
  • வெந்தயம் - மூன்று
  • கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை
  • துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • புளியை நன்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக நறுக்கி போட்டு உப்பு அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • வறுத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெய்யில் வறுத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
  • உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
  • தக்காளி வெந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றி கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
  • கடைசியில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More