தேவையான பொருட்கள்
- கோதுமைமா - 500 கிராம்
- உப்பு - தேவையானளவு
- பால் - ஒரு மேசைக்கரண்டி
- பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
- முட்டை - ஒன்று
- கொதிநீர் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் (சிறிது சிறிதாக வெட்டியது) - ஒன்று
- பச்சைமிளகாய் (சிறிய வட்டமாக வெட்டியது) - 3
- கோதுமைமா, உப்பு, பால், பட்டர், முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
- அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.
- வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும். இருபக்கமும் வெந்ததும் சுவையான ரொட்டி தயராகி விடும் .
- இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும்.
Posted in: சிற்றுண்டி வகைகள்
0 comments:
Post a Comment