தேவையான பொருட்கள்
*கத்தரிக்காய் 4
*உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
*காய்ந்த மிளகாய் 6
*உப்பு தேவையான அளவு
*பெருங்காயம் சிறிதளவு
*புளி - சுண்டைக்காய் அளவு
*எண்ணெய் - 8 டீஸ்பூன்
செய்முறை
1. கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
3. சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
4. இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்

0 comments:
Post a Comment