பனீர் - 250 கிராம்,
பொடித்த சர்க்கரை - கால் கப்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
தேங்காய் - ஒரு மூடி,
சர்க்கரை - அரை கப்,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
பனீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து, அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும். பனீரை துருவி, பொடித்த சர்க்கரை சேர்த்துப் பிசையும் போது விருப்பமான ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்துச் செய்யலாம். கலர்ஃபுல்லாக இருக்கும்.



0 comments:
Post a Comment