Monday, December 31, 2012

மாம்பழக் குழம்பு


வேண்டியவைகள்  ——துவரம் பருப்பு—1கப்
புளி—சின்ன எலுமிச்சை அளவு
ஸாம்பார் பொடி–3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
கடுகு–1டீஸ்பூன்
வெந்தயம்–அரைஸ்பூன்
வாஸனைக்கு–பெருங்காயம்
ருசிக்குஉப்பு
தாளிக்க எண்ணெய்—3டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நாட்டு மாம்பழம்—5,6
செய்முறை—–பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து  4கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச்
சாறெடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளி ஜலத்துடன் 5,6  சின்ன
மாம்பழங்களைச் சேர்த்து உப்பு, ஸாம்பார்ப் பொடி சேர்த்து
கொதிக்க விடவும்.
பழங்கள் சுருங்கி வெந்து   குழம்பின் பச்சை வாஸனை போனபின்
வெந்த பருப்பைக் கலக்கிக் கொட்டி கொதிக்க விடவும்.
மிளகாய் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தை எண்ணெயில்
பொரித்துக் , கொட்டி  1டீஸ்பூன்  அரிசி  மாவைச் சிறிது ஜலத்தில்
கரைத்துவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
இது கிராமங்களில் கிடைக்கும் சாதாரணமான நாட்டு மாம்பழத்தில்
செய்வது வழக்கம். சாம்பார் ருசியாக இருக்கும். பழம் ருசியாக
இருக்காது.
கிளிமூக்கு மாம் பழத்தில் [ஒட்டு மாம்பழம்]  செய்தால் புளியை
குறைத்து சேர்த்து  பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் கலந்து
உப்புகாரம் சேர்த்து கொதிக்கவிட்டு ,வெந்த பருப்பைச் சேர்த்து
தாளித்துக் கொட்டலாம்.
1 டீஸ்பூன் தனியாவையும்,   சிறிது தேங்காயையும்  வறுத்துஅறைத்து
சேர்த்தால் ருசி கூடும்.
சற்று புளிப்பும், இனிப்புமான குழம்பு இது.
மாம்பழ  மணத்துடன்  ருசியாக இருக்கும். கொத்தமல்லி
கறி வேப்பிலை சேர்த்து மணத்தை அதிகப் படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More