Monday, December 31, 2012

முருங்கைக் கீரை குழம்பு


வேண்டியவைகள்—-
பயத்தம் பருப்பு—–அரைகப் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு —–அரைகப
இவைகளைத் தண்ணீர் விட்டுக் களைந்து   6 முறுங்கைக்
காய்களை  அலம்பி  2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிச்
, மஞ்சள்பொடியும்     3கப்    தண்ணீர்ரும் சேர்த்து ப்ரஷர்
குக்கரில் வேக வைத்து  இறக்கவும்.
வறுத்து அறைக்க——
மிளகாய் வற்றல்——–4
மிளகு  —–அரை டீஸ்பூன்
தனியா—-ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–முக்கால் கப்
எண்ணெய்—ஒரு டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
திட்டமான தக்காளிப் பழம் —-2 நறுக்கிக் கொள்ளவும்.
தாளித்துக் கொட்ட  –கடுகு, பெருங்காயம், ஒரு ஸ்பூன்நெய்
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறி வேப்பிலை
செய்முறை——வறுக்கக் கொடுத்த சாமான்களை வறுத்து
தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் ஜலம்
சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும்  வதக்கி  அறைப்பதில் சேர்த்து விடவும்.
காயும் பருப்புமாக வேக வைத்ததில்  அறைத்த கலவையை
கறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து
நன்றாகக் கொதிக்க விடவும் நிதானமான  தீயில் ஞாபகம்
இருக்கட்டும்.      இறக்கி வைத்துநெய்யில் கடுகுபெருங்காயம்
தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம். தனிப்படவும்
நிறைய வெங்காயத்தை மாத்திரம்உபயோகித்தும்
செய்யலாம்.
தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு
வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து
 கொள்ளலாம். கெட்டியாக இல்லாமல் சற்றுத் தளர்வாக
தயாரிப்பதாலும்,   புளி இல்லாது செய்வதாலும் பொரித்த
குழம்பு என்று சொல்கிறோம்.

1 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More