Monday, December 31, 2012

வாழைத்தண்டு மோர் குழம்பு

தேவையானவை:
*வாழைத்தண்டு-2 அடி நீளம்
*பச்சை மிளகாய்-6
*கடலைப்பருப்பு-1 1/2 டீஸ்பூன்
*தயிர்-100 கிராம்
*கறிவேப்பிலை-2 கொத்து
*தேங்காய் எண்ணெய்-1 டீஸ்பூன்

*உப்பு-தேவையான அளவு


செய்முறை:
*தேங்காயைத் துருவி அரைக்க வேண்டும். அத்துடன் பச்சை மிளகாய், கடலைப்பருப்பை சேர்த்து வெண்ணெய்போல் அரைக்க வேண்டும். நன்றாக அரைத்ததும் வழித்து எடுத்து, தயிரில் கலந்து கொள்ள வேண்டும். 

*வாழைத்துண்டை பொடியாக நறுக்கி, ஒரு ஈயமுள்ள பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும். வெந்தபின் தண்ணீரை இறுத்து விட்டு, உப்பு போட்டு, தயிருடன் கலந்து, வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க விடவும். 

*கொதித்த பின் பாத்திரத்தை கீழே இறக்கி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, சுத்தமான தேங்காய் எண்ணெயையும் ஊற்றி, ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரங்கழித்து சூடாக சோற்றில் பிசைந்து சாப்பிட, மிகவும் சவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More