தேவையான பொருட்கள்
ஆரோருட் கிழங்கு மாவு – 500 கிராம்
கோதுமை மாவு – 250 கிராம்
வெண்ணெய் -150 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
பால் – 300 மில்லி
காடி – 4 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஆரோரூட் மாவைப் போட்டு, அதோடு கோதுமை மாவு, வெண்ணெய், சர்க்கரை, காடி ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து இவற்றோடு பாலைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு எடுத்து பலகையில் வைத்து, பெரிய அளவில் பூரி போல பதினைந்து மில்லி கிராம் கனத்திற்குத் தட்டையாகச் செய்து, தேவையான வடிவத்திலுள்ள அச்சு கொண்டு வெட்டி எடுத்து, தட்டில் வெண்ணெய் தடவி வரிசையாக அடுக்கி ஓவனில் வைத்து பதமாகச் சுட்டெடுக்கவும்.
0 comments:
Post a Comment