தேவையானவை!
பாதாம் பருப்பு – கால் கிலோ
பால் – ஒரு கப்
நெய் – 4 மேசைக்கரண்டி
சர்க்கரை – 250 கிராம்
உப்பு – ஒரு கிள்ளு
ஏலக்காய் – 3
ஆரஞ் கலர் – சிறிது
செய்முறை!
பாதாம் பருப்பை ஊற வைத்தோ அல்லது மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ, அதை தோலுரித்து எடுத்து கொண்டு பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு பாதாம் பருப்பு மூழ்கும் வரை பால் ஊற்றி மிகவும் நைசாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு நாண்-ஸ்டிக் பேனில் இரண்டு மேசைக்கரண்டி நெய் போட் டு உருக்கவேண்டும்..
விழுதை அரைத்ததும், சர்க்க ரையை ஏலக்காய் விதையுடன் அரைத்துக்கொள்ளவும். இதனா ல் சாப்பிடும்போது ஏலக்காய் வாயில் தட்டுப்படாது.
பின் அரைத்த விழுதை பேனில் போடவும்.
கை எடுக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லை எனில் அடிப்பிடித்து அல்வாவின் வாசத்தையே மாற்றி விடும். மீண்டும் சிறிது நெய் சேர்க்கவும்.
இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
கொஞ்சம் நெய் வெளிவிட தொடங்கும் போது கலரை சேர்த்து கல க்கவும்.
நன்கு பேனில் ஒட்டாத பதம் வரவேண்டும். தேவையான நெய் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
அல்வாவில் நெய் சிறிது பிரிந்து வந்ததும் இறக்கவும்.
என்னங்க சுவையான பாதாம் அல்வா ரெடி பண்ணிய்யாச்சு, இந்த அல்வாவை மற்றவர்களுக்கு சாப்பிட கொடுத்து நீங்களும் சாப்பி டுங்க!
0 comments:
Post a Comment