Thursday, January 3, 2013

வெங்காயக் கொழுக்கட்டை


தேவையானவை:
  • அரிசி – 250 கிராம்
  • தேங்காய் – 1
  • வெல்லம் – 250 கிராம்
  • ஏலக்காய் – 5
செய்முறை:
அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து நீரை வடிய வைத்து மாவாக்கி ஒரு மணி நேரம் ஒருவெள்ளைத் துணியில் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறி இறக்கி வைத்து பதினைந்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கரைந்ததும் அதில் ஏலப்பொடி, தேங்காயைப் போட்டுக் கொஞ்சம் நெய்விட்டு சுருளக் கிளற வேண்டும். அப்போது பூரணம் தயாராகிவிடும். உள்ளங்கையில் எண்ணெய்த் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கி வைத்து நடுவில் ஒரு கரண்டி பூரணத்தை வைத்து மூக்குபோல மாவு வட்டத்தின் முனைகளை ஒன்றாக இணைத்து கொழுக்கட்டை வடிவத்துக்குக் கொண்டு வரவும். பின்னர் அவற்றை இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். சுவையான கொழுக்கட்டை தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More