Thursday, January 3, 2013

ஆந்திர மிளகுக்கறி


தேவையானவை :
  • ஆட்டிறைச்சி – 200 கிராம்
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 50 கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 15 கிராம்
  • மிளகு தூள் – 30 கிராம் (தேவைப்பட்டால் குறைத்துக் கொள்ளலாம்)
  • மிளகாய் வற்றல் – இரண்டு
  • பெருஞ்சீரகம் – சிறிதளவு
  • நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
  • முதலில் ஆட்டிறைச்சியை துண்டுகளாக்கி, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், மிளகாய் வற்றல், சின்னவெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  • ஊறிய இறைச்சி துண்டுகளை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
  • தொடர்ந்து தண்ணீர் வற்றி, வதக்கும் போது எண்ணெய் வெளியேறும்.
  • இதுதான் சரியான பக்குவம். மிளகுக்கலவையில் இறைச்சி ஏற்கனவே ஊறியிருக்கும்.
  • இதுதவிர வேகவைக்கும் போதும் மிளகுக்கலவை சேர்ந்திருப்பதால் சுவை தூக்கலாக இருக்கும்.
சமையல் நேரம்: ஊறவைக்கும் நேரம் தவிர, 20 நிமிடங்கள்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More