தேவையானவை :
பால்-1 லிட்டர்
க்ரீம்- 150 கிராம்
சர்க்கரை- 250 கிராம்
கோக்கோ பொடி- 1 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ்- சிறிதளவு
செய்முறை :
பாலை நன்றாகக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். இதனுடன் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். க்ரீமை கடைந்து பாலுடன் சேர்க்க வேண்டும். கோக்கோ பொடியையும், வெனிலா எசன்ஸ்சையும் சேர்த்து நன்றாகக் கடைந்து ஒரு பாத்திரத்தில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். சில மணி நேரங்கள் கழித்துப் பறிமாற வேண்டும்.




0 comments:
Post a Comment