Monday, January 7, 2013

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

பால் - 200 மில்லி
பச்சரிசி - 1 படி
வெள்ளம் - 1/2 கிலோ
முந்திரி அரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 4 காய்
திராட்சை - 50 கிராம்
தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)
கடலை பருப்பு - 200 கிராம்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவைகேற்ப (1 தேக்கரண்டி)

சமைக்கும் முறை:
  1. இரண்டு படி தண்ணீர் தை பொங்கலிடும் பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
  2. அதனுடன் பாலை சேர்க்கவும்.
  3. பால் பொங்கியவுடன் (பொலி பொலி பொங்கலே போங்கா, கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரம் செய்யவும்) [அடுத்த வீட்டுக்காரர்களை அனுசரிக்கவும்]
  4. கடலை பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
  5. மறுபடியும் பொங்க விடவும்.
  6. அதனுடன் பச்சரிசி, உப்பு  சேர்த்து கொதிக்க விடவும்.
  7. இதனுடன் வெள்ளம், முந்திரி அரிசி, தேங்காப்பூ, திராட்சை, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. கடைசியாக ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி, மஞ்சள் கொத்து கட்டி அடுப்பை விட்டு இறக்கவும்.
  9. சூரிய பகவானை வழிபட சர்க்கரை பொங்கல் தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More