தேவையான பொருட்கள்
செய்முறை
- வெண்டிக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - ஒன்னு
- வரமிளகாய் - மூன்று
- கருவேப்பில்லை - சிறிது
- மஞ்சள் தூள் - சிறிது
- மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை- வெங்காயம், வெண்டிக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்,
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும் பின் மிளகாய் ,கருவேப்பில்லை ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய வெண்டியை சேர்த்து கிளறிவிடவும் குழகுலப்பு போகும் வரை புரட்டி விடவும்.தேவையான அளவு தண்ணீர் தெளிக்கவும்.
- பின் மஞ்சள்தூள்,மிளகாய் தூள் உப்பு சேர்த்து மூடி வைக்கவும் தேவையானால் எண்ணெய் சேர்க்கவும்.
- வெண்டிக்காய் நிறம் மாறும் போது தேங்காய் துருவலை சேர்க்கவும்.
- சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான வெண்டிக்காய் பொரியல் ரெடி.
Posted in: பொரியல் வகைகள்



0 comments:
Post a Comment