Tuesday, January 1, 2013

காளான் தொக்கு

தேவையான பொருட்கள்
  • காளான் - 1 டின்
  • பல்லாரி - 1 பெரியது
  • மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • வரட்டிய இறால் - 10
  • தேங்காய் பால் - 1/4 கப்
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
  • பல்லாரி, காளானை சிறிதாக நறுக்கி கொள்ளவும் .
  • சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
  • பின் அதில் நறுக்கிய காளான், இறால், பல்லாரியை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பின்பு மஞ்சள் தூள், மசாலா தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • மசாலா வதங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விடவும்.
  • காளான் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More