Tuesday, January 1, 2013

குடமிளகாய் சாதம்

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப், 
குட மிளகாய் - 1, 
வெங்காயம் - 2, 
பச்சை மிளகாய் - 2, 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், 
சீரகத் தூள் - அரை டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய், நெய் - சிறிது, 
முந்திரி, திராட்சை - சிறிது, 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.


எப்படிச் செய்வது?

குடமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம்  சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்கவும். அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு  சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்து,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More