தேவையான பொருட்கள்
செய்முறை
- மைதா -- 1 கப்
- வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி தழை -- ஒரு டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் -- 3 (பொடியாக நறுக்கியது)
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
- உப்பு -- தே.அ
- பால் -- சிறிதளவு
- எண்ணைய் -- பொரிக்க தே.அளவு
செய்முறை- வெங்காயம் , கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
- அத்துடன் மைதாவை சேர்த்துக்கொள்ளவும்.
- வாணலியில் 2 1/2ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து மைதா கலவையில் போடவும்.
- தே.அ பாலை ஊற்றி மைதாவை கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
- வட்டமான அச்சில் வட்ட வட்டமாக வெட்டியெடுக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி மிதமான சூட்டில் க்ரிஸ்பீஸ்களை ஃப்ரவுன் நிறத்தில் பொரிக்கவும்.
- ஆறியதும் சாப்பிட நன்றாக இருக்கும்.
Posted in: பிஸ்கட் வகைகள்



0 comments:
Post a Comment