தேவையான பொருட்கள்
செய்முறை
- பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
- கொடுவா மீன் - ஒரு கிலோ
- தேங்காய் - 4 கீரல்
- தக்காளி - 300 கிராம்
- வெங்காயம் - அரை கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 4
- தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி
- கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
- மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
- மல்லித் தழை - ஒரு பிடி
- புதினா - ஒரு பிடி
- எலுமிச்சை - ஒன்று
- பான்டான் இலை - ஒன்று
- பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 5
- ஏலம் - 4
- தயிர் - 200 மில்லி
- முந்திரி - 10
- பசு நெய் - 50 கிராம்
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
- கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
- சன்ஃப்ளவர் ஆயில் - அரை லிட்டர்
- சோடா உப்பு - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- மீன் பொரிக்க:
- மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
- மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
- கார்ன் ஃப்ளவர் மாவு - ஒரு மேசைக்கரண்டி
- முட்டை - ஒன்று
- உப்பு - தேவையன அளவு
- கேசரி பவுடர்- ஒரு சிட்டிகை
செய்முறை
- முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து துண்டங்கள் போடவும். வெங்காயத்தை உரித்து நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
- தேங்காயை நைசாக அரைக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். முந்திரியை ஒடித்து வைக்கவும்.
- பிறகு ஒரு வாயகன்ற கடாயில் எண்ணெய் அனைத்தயும் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அதில் மேலும் முந்திரியையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு மீனை நீர் இல்லாமல் வடிகட்டவும்.
- அதில் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, உப்பு, சோள மாவு, முட்டை அனைத்தயும் போட்டு நன்கு பிசறவும்.
- வெங்காயம் பொரித்த எண்ணெயில் மீன் துண்டங்களை 2, 3 ஆக போட்டு முறுகாமல் பொரித்து எடுக்கவும்.
- பிறகு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலம் ஆகிவற்றை போட்டு வெடித்ததும் அதில் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். மேலும் மிளகாய்பொடி, மஞ்சள்பொடி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி அதில் தயிர் சேர்க்கவும்.
- மேலும் தேவையான உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு மூடி வேக விடவும்.
- சிறிது நேரத்தில் (சோடாப்பு சேர்ப்பதால்) வெங்காயம், தக்காளி கரைந்து விடும் அதில் மேலும் புளியை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
- மேலும் தக்காளி சாஸ், எலுமிச்சைச்சாறு, கரம் மசாலா, அரைத்த தேங்காய் விழுது அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
- பிறகு ஒரு கிலோ அரிசி வேகுமளவு உள்ள பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு அதில் பான்டான் இலையை 3 துண்டாக வெட்டி போட்டு கொதிக்க விடவும்.
- அதில் தேவையான உப்பு சேர்க்கவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் போது அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கட்டி அதில் போடவும். அரிசி 80% வெந்தவுடன் வடிகட்டவும்.
- பிறகு அதே பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள குழம்பை 2 கரண்டி பரவினாற்போல் விடவும், மேலும் வடித்த சோற்றை அதில் கொட்டி பரப்பி விடவும்.
- மேலும் கேசரி பவுடரை சோற்றில் போட்டு அகப்பையால் கிளறவும், மேலும் 3 பெரிய கரண்டி குழம்பை பரவினாற்போல் விடவும்.
- இத்துடன் பொரித்து வைத்துள்ள மீனை அதன் மேல் பரவினாற்போல் போடவும். மேலும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை அதன் மேல் போடவும்.
- மேலும் வறுத்த முந்திரி தூவி அதன் மேல் மீதமுள்ள குழம்பை பரவினாற்போல் ஊற்றவும் அதன் மேல் மல்லி புதினா தூவவும்.
- கடைசியாக பசு நெய்யை பரவினாற்போல் ஊற்றி மூடி அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து பாத்திரத்தை ஏற்றி மேலே ஏதாவது கணம் வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் புழுங்கவிடலாம்.
Posted in: பிரியாணி வகைகள்




0 comments:
Post a Comment