Tuesday, January 8, 2013

சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்


சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்

தேவையானவை :

1.   முட்டை  – 1
மிளகுத் தூள் – ¼ + ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – 1 + ¼ + ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
2.    சாசேஜ் – 2
மிளகாய்த்  தூள் – ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – ¼ தேக்கரண்டி
உப்புத் தூள் – ¼ தேக்கரண்டி
3.   எண்ணை + பட்டர்  – 1  தேக்கரண்டி
சர்க்கரை –1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 பல்
பொடியாக நறுக்கிய பச்சமிளகாய் 1
பொடியாக நறுக்கிய வெங்காய தாள் – 1
மேகி கியூப் – ¼ துண்டு
சோயா சாஸ் – ½ தேக்கரண்டி
ஃப்ரோஜன் மிக்ஸட் வெஜிடேபுள் – 2 மேசைக்கரண்டி
4.     உதிரியாக வடித்த சாதம் – 1 கப்

செய்முறை:        

1. முட்டையில் ¼ தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து தவாவில் கால் தேக்கரண்டி எண்ணை + பட்டர் ஊற்றி தோசையாக பொரித்து தூளாக்கி வைக்கவும்
2. குக்கரில் சாசேஜை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலில் வேக வைத்து பொடியாக ¼ தேக்கரண்டி மிளகாய்த் தூள் ¼ தேக்கரண்டி உப்புத் தூள் போட்டு ¼ தேக்கரண்டி பட்டர் + எண்ணையில் வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவாவில் பட்டர் + எண்ணையை சேர்த்து சர்க்கரை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் , மிக்ஸ்ட் வெஜிடேபுள் சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு, மேகி கியூப் அனைத்தும் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
4. பொடித்து வைத்துள்ள் முட்டை, உதிரியான சாதம் , பொரித்து வைத்துள்ள சாசேஜ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி இறக்க்வும்.
குறிப்பு:இதில் சாசேஜ், முட்டை, சாதம், வெஜிடேபுள்ஸ் தனித்தனித்தனியாக தயாரிப்பதால் உப்பின் அளவில் சிறிது கவனம் வைத்து சேர்க்கவேண்டும்.
( அரிசி 75 கிராம் 10 நிமிடம் ஊறவைத்து ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து உப்பு + எண்ணை விட்டு உதிரியாக வடித்து ஆறவைத்து வைக்கவும்.
( பச்சரிசி, பாசுமதி அரிசி எல்லாம் உலை கொதித்து 7 நிமிட்த்தில் வெந்துவிடும்) இதை ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து மறுநாள் ப்ரைட் ரைஸில் சேர்க்கலாம்).

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More