தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 5
தயிர் - 1 கோப்பை
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. சிறிது எண்ணெயில் பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
2. நெல்லிக்காயை வதக்கி, கொட்டை நீக்கி, உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
5. அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
1. தேங்காய்ப்பூவை நெல்லிக்காயுடன் சேர்த்தும் அரைக்கலாம், தனியாகவும் சேர்க்கலாம்.
0 comments:
Post a Comment