Tuesday, January 1, 2013

புளிப்பு மாங்காய் தொக்கு

தேவையான பொருட்கள்
புளிப்பு மாங்காய் - 1
புளிப்பு மாம்பழம் - 2
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி (கருகாமல் வறுத்து பொடி செய்தது)
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் (துருவியது) - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை


செய்முறை
1. மாங்காய், மாம்பழம் இரண்டையும் தோலெடுத்து பொடியாக நறுக்கவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து, தாளிக்க கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து தாளித்து, அதனுடன் மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து, வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

3. கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

4. சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.

குறிப்பு
1. இந்த தொக்கைப் பயன்படுத்தி மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளும் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More