Tuesday, January 1, 2013

மீன் வறுவல்

தேவையான பொருட்கள்
  • 1. நெத்திலி மீன் - 1 கப்
  • 2. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி [உங்கள் காரத்துக்கு ஏற்ப]
  • 3. மிளகு தூள் - 1 தேக்கரண்டி [உங்கள் காரத்துக்கு ஏற்ப]
  • 4. உப்பு
  • 5. எலுமிச்சை சாறு - 1 - 2 தேக்கரண்டி
  • 6. மஞ்சள் தூள் - சிறிது
  • 7. எண்ணெய் - பொரிக்க

செய்முறை
  • மீனை சுத்தம் செய்து தூள் வகை எல்லாம் கலந்து எலுமிச்சை சாரு விட்டு பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். [நீர் சேர்க்க தேவை இல்லை. மீன் கழுவி உள்ள ஈரமும், எலுமிச்சை சாறுமே போதும்]
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை நீர் இல்லாமல் எடுத்து போட்டு பொரித்து எடுக்கவும். [ரொம்ப க்ரிஸ்பியாக ஆகி விடாமல் எடுக்கவும்]

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More