Tuesday, January 1, 2013

கருவாடு வறுவல்

தேவையான பொருட்கள்
  • நடுத்தர அளவு கருவாடு - 1
  • சின்னவெங்காயம் - 15
  • பூண்டு - 2 பல்
  • மிளகாய்வற்றல் - 4
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


செய்முறை
  • கருவாட்டை சுத்தம் செய்து அரைத்தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • ஆறியதும் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய்வற்றல் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும்.
  • இடிகல் இருந்தால் அதில் இடித்தால் சுவை அதிகம். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காய கலவை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More