தேவையான பொருட்கள்
சேமியா - 150 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
பால் - 1/2 லிட்டர்
முந்திரி - 10
ஏலக்காய் - 1/4 தேக்கரண்டி
திராட்சை - 10
நெய் - 25 கிராம்
பாதாம் பவுடர் / மில்க் மெய்டு - 2 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் சேமியாவை சுடு தண்ணீரில் வேகவைத்து வடித்து தனியே வைத்துக்கொள்ளவும்.
2. இந்த சேமியாவில் 50 கிராம் சர்க்கரையை தூவி வைக்கவும்.
3. முந்திரி பருப்பையும் திராட்சையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
4. பாலை காயவைத்து, மீதி சர்க்கரையை சேர்த்து லேசாக கிளறி கொதிக்க விடவும்.
5. சர்க்கரை கரைந்ததும் வேக வைத்த சேமியாவையும் மில்க் மெய்டு / பாதாம் பவுடரையும், சேர்த்துக் கிளறி விடவும்.
6. பிறகு ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி வைக்கவும்.
7. விருப்பமானவர்கள் தேங்காயை பூ போல் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு
1. தேவையானால் பாதாம் பவுடர் / மில்க் மெய்டுக்கு பதில் பால் மட்டுமே சேர்த்துச் செய்யலாம்.
2. சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கவும்.
3. சேமியாவை லேசாக வறுத்து வேகவைத்தாலும் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
0 comments:
Post a Comment