தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1/4 கிலோ
பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
1. கடலைப் பருப்பையும், பட்டாணி பருப்பையும் ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும்.
2. பின்னர் இரு பருப்பையும் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
3. இதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
4. சிறு உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வடை சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்தவுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
1. பருப்பு அரைக்கும் போது 3 கிராம்பு மற்றும் சிறிது பட்டை சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.
2. எண்ணெய் சரியாக சூடாகாமல் வடை போட்டால் எண்ணெய் குடிக்கும்.
3. வடைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும்.
0 comments:
Post a Comment