Monday, December 31, 2012

எலுமிச்ச இலை துவையல்

தேவையானவை:

நார்த்த இலை 1 கப்
எலுமிச்சை இலை 1 கப்
கறிவேப்பிலை 1/2 கப்
மிளகாய் வற்றல் 10
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையானது

செய்முறை:
எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்) வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல், மம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.
இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
வெய்யிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More