Monday, December 31, 2012

மிளகுக் குழம்பு


வேண்டியவை          வறுக்க மிளகு-ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா—இரண்டு டேபிள்ஸ்பூன் ,  மிளகாய்வற்றல்- ஒன்று
உளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன்,   துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்.
கறிவேப்பிலை-15-அல்லது20 இலைகள்,    நசுக்கிய சுக்கு சிறிய துண்டு,  பெருங்காயம் சிறிது.    வறுக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்.
தாளிக்க- நெய்ஒருடேபிள்ஸ்பூன்,   நல்லஎண்ணெய்ஒருடேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
கரைக்க—பழைய புளி எலுமிச்சை அளவு
சுவைக்கு உப்பு,—- வெல்லம் சிறிது,        மஞ்சள்பொடி சிறிது.
காய்கறிகள்— ,பிஞ்சு கத்தரிக்காய்- –முருங்கைப் பிஞ்சு,பொடியாக நறுக்கி வேக வைத்த சேனைக்கிழங்கு,   இதில் விருப்பமானதை உபயோகிக்கலாம்.
செய்முறை—–வறுக்கக் கொடுத்த சாமான்களை எண்ணெயில் சிவக்க வறுத்து  கரிவேப்பிலையையும் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து 2-3 முறை தண்ணீர் விட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் எண்ணெயும் நெய்யுமாகக் காய வைத்து,     கடுகு,வெந்தயம் தாளித்து நறுக்கிய காயையும் போட்டு தீயைக் குறைத்து நன்றாக வதக்கி  புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.3
உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து  புளி வாசனைபோக கொதிக்கவிட்டு
அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து   நீர்க்க இல்லாமல் குழம்பை   சரியான பதத்தில் இறக்கி  உபயோகிக்கவும்.
மருத்துவ குணமுள்ள  காரமான குழம்பு இது. நெய் விட்டுச் சாப்பிட வேண்டும். காரம் கூட்டிக் குரைத்து உபயோகிக்கலாம்.
பின் குறிப்பு——தாளிக்கும்போது,    சின்ன வெங்காயம்,   அல்லது
தோல் நீக்கிய பூண்டுப் பகுப்புகளையும் காய்கறிகளுக்குப்  பதிலாகச்
சேர்த்து வதக்கியும் செய்யலாம். அல்லது  வதக்கிய பூண்டைச்
சிறிது அரைக்கும்போதும் சேர்க்கலாம்.
மிளகு முக்கியமானதால்,  சேர்மானங்கள்  அவரவர்கள்  விருப்பம்.
காய்கள் சேர்க்கும் அளவைப் பொறுத்து  எண்ணெயும்  கூட்டிக் குறைக்க வேண்டும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More