வேண்டியவைகள்–புளிப்பு மோர்-2கப்
வறுக்க வேண்டியவைகள் மிளகாய் வற்றல்- 2,——–தனியா 1டீஸ்பூன்
வெந்தியம்——1டீஸ்பூன்,——–அரிசி 1′டீஸ்பூன்,——-துவரம் பருப்பு 1டீஸ்பூன். இவைகளை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவல் 2டேபிள் ஸ்பூன்,——பெருங்காயம் சிறிது.
தாளிக்க—–எண்ணெய், கடுகு அரை டீஸ்பூன்,—–சிறிது மஞ்சள்பொடி,-ருசிக்குஉப்பு,——கறி வேப்பிலை சிறிது.
செய்முறை———வறுத்த சாமான்களுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயம் திட்டமாகச் சேர்த்துமோரில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நிதானதீயில் பால் பொங்கும் பதத்தில், மோர்க் கலவையைக் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கள் விருப்பப்படி சேர்க்கவும். காரமும் அப்படியே.
பருப்புத் துவையல் சாதங்கள், பொடிவகை சாதங்களுடன், சேர்த்துச் சாப்பிடநன்றாக இருக்கும்.
இதையே வறுத்தரைத்த வெந்தயப் பொடி, மிளகாய்ப் பொடி, ஒருடீஸ்பூனகடலைமாவு, பெருங்காயம் உப்பு, முதலியவற்றை புளிப்பு மோரில் கரைத்து தேங்காயெண்ணெயில் கடுகை தாளித்து ஒரு கொதிவிட்டு அவசரத்திற்கும் தயாரிக்கலாம். காய்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை.செய்து பாருங்கள்.
0 comments:
Post a Comment