Monday, December 31, 2012

பரங்கிகாய் வெல்ல குழம்பு




தேவையானவை :

பரங்கிக்காய்  - ஒரு துண்டு, 
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 3, புளி எலுமிச்சை அளவு 
மிளகாய் தூள்  3 டீஸ்பூன்
தனியாதூள் - ஒரு டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், கறிவேப்பிலை  
சிறிதளவு, உப்பு - தேவையான அளவு 
வெல்லத்தூள் & ஒருடேபிள்ஸ்பூன் 
பச்சை மிளகாய்  - 2. 
தாளிக்க: கடுகு- அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன் 

செய்முறை :

சோம்பு & அரை டீஸ்பூன் எண்ணெளிணி & 3 டேபிள்ஸ்பூன் வறுத்துப் பொடிக்க:
பொட்டுக்கடலை & ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் & டீஸ்பூன், பச்சரிசி & ஒரு டீஸ்பூன்.
பரங்கிக்காயை துண்டுகளாக்குங்க. வெங்காயம், தக்காளியைப் பொடியாகநறுக்குங்க. புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்க. பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்துப் பொடியுங்க. எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி பரங்கிக்கா, தக்காளி,உப்பு சேருங்க. தக்காளி கரைய வதக்கி, புளித்தண்ணீர் சேருங்க. மிளகாய் தூள், மஞ்சள்தூள்,தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, வெல்லம், பொடித்த பொடி சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்க. இனிப்பும் புளிப்பும் கலந்த குழம்பு இது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More