Monday, December 31, 2012

வெள்ளரி பழ குழம்பு



தேவையானவை :


வெள்ளரிப் பழம் 1, 
புளி & சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு & தேவைக்கு.அரைக்க:
தேங்காய் துருவல் & அரை கப், 
காய்ந்த மிளகாய் & 6.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், 
பெரிய வெங்காயம் & 1, 
எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை :



வெள்ளரிப் பழத்தை தோல், விதை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாக கரையுங்கள். தேங்காயையும் மிளகாயையும் ஒன்றாக அரையுங்கள். 2 கப்தண்ணீரை கொதிக்க விட்டு அதில் வெள்ளரி பழ துண்டுகள், உப்பு சேர்த்து வேக விடுங்கள்.பின்னர் புளி தண்ணீர், அரைத்து விழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள். 

வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம்சேருங்கள். சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி குழம்பில் சேருங்கள். ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More