Monday, December 31, 2012

கீரை குழம்பு

    தேவையானவை :
     
    * அரைகீரை-2 கப்
    * தக்காளி-6
    * கத்தரிகாய்-100 கிராம்
    * புளிகுழம்பு பொடி-4 ஸ்பூன்
    * மிளகாய் தூள்-அரை ஸ்பூன்
    * புளி -நெல்லிக்காய் அளவு
    * தாளிக்க:
    * எண்ணெய்
    * வெந்தயம்
    * சோம்பு
    * கடுகு
    * உளுந்து
    * வரமிளகாய்-5
    * வெங்காயம்-2

    * பூடு-8பல்



 செய்முறை :

    * புளியை ஊற வைத்து பின் கரைத்துக்கொள்ளவும்.அதில் புளிகுழம்பு பொடியை சேர்க்கவும்
    * கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.கீரையை அரிந்து சுத்தம் செய்துக்கொள்ளவும்
    * கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
    * பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
    * தக்காளி சேர்த்து வதங்கியதும் கீரையை சேர்க்கவும்
    * கீரை சுருண்டதும் புளிகரைசல்,கத்திரிக்காய்,உப்பு சேர்த்து வாசனை போக கொதிக்கவிடவும்
    * கீரை குழம்பு தயார்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More