Wednesday, January 2, 2013

கடலைப் பருப்பு ஸ்வீட்

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 1 கப்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
மைதா மாவு - 1 கப்,
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்,
சர்க்கரை - இரண்டரை கப்,
துருவிய கொப்பரை - 1 கப்,
பொடித்த சர்க்கரை - அரை கப்,
ஏலக்காய் தூள் - சிறிது,
பொடித்த முந்திரி, பாதாம்,
திராட்சை, சர்க்கரை - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை வேக வைத்து, வடித்து மிக்சியில் மசித்துக் கொள்ளவும். நெய்யில் சமையல் சோடா சேர்த்து கையால் நன்கு தேய்க்கவும். இத்துடன் நன்கு சலித்த மைதாவைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்க்கவும். பிறகு அத்துடன் கோவா, ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்து, வடை அல்லது பேடா மாதிரி தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இரண்டரை கப் சர்க்கரையில் அளவாகத் தண்ணீர் விட்டு, கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சி, பொரித்த பேடாக்களை அதில் போட்டு எடுத்து,  கொப்பரைத் தூளில் புரட்டி, முந்திரி, பாதாம், திராட்சை, சர்க்கரையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More