Tuesday, January 8, 2013

மலபார் அப்பம்


தேவையான பொருட்கள்
பச்சரிசி-250 கிராம்
ஏலப்பொடி-சிறிதளவு
வெல்லம் -250 கிராம்
தேங்காய் எண்ணெய்- 2டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம்-2
தேங்காய்-கால்மூடி

செய்முறை
பச்சரிசியை அரைத்து அந்த மாவை வறுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தேங்காயையும் மிகச்
சிறிய அளவில் வெட்டிக்கொள்ளுங்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சுங்கள். பாகில் மாவையும் ஏலக்காய்
பொடியையும் கொட்டி கிளறிவைத்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் குக்கர் வைத்து தேங்காய் எண்ணெய்
விட்டு தேங்காய், வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். வதங்கியதும் பாகில் கலந்த மாவை அதில்
கொட்டி மூடி விடுங்கள். வெயிட் போடவேண்டாம் மாவு வெந்து ஆவி வெளியேறும் தருணத்தில் குக்கரை
இறக்கி ,திறந்தால் வட்ட வடிவில் அப்பம் வெந்து நிற்கும். அதைத் துண்டு போட்டு பறிமாறலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More