Tuesday, January 8, 2013

வாழைக்காய் கட்லட்


தேவையான பொருட்கள்;-
வாழைக்காய் வேகவைத்து மசித்தது -2
கேரட் துருவியது  -2
நறுக்கிய பச்சை மிளகாய்-2
நறுக்கிய இஞ்சிப் பூண்டு -சிறிதளவு
பொடித்த் வேர்க்கடலை -சிறிதளவு


செய்முறை;-
1.ஒரு நான் ஸ்டிக் பேனை அடிப்பில் வைத்து கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
2.இஞ்சி பூண்டு சேர்த்து வணக்கவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.
3.துருவிய  கேரட்  சேர்க்கவும்.  உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
4.கரம் மசாலா சிறிதளவு சேர்க்கவும்.
இதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். நன்றாக ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருண்டை
பிடிக்கவும்.அதனை கிண்ணம் வடிவில் செய்து அதன் உள்ளே பொடியாக்கிய பேரிச்சம்பழத்தையும்
பொடியாக்கிய உலர்ந்த திராட்ச்சையும் சேர்க்கவும்.  அதனை திரும்பவும் உருட்டி வடையாக தட்டி  பொடித்த
வேர்க்கடலையில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான வாழைக்காய் கட்லட் ரெடி.
இதற்கு தொட்டுக் கொள்ள மீட்டா சட்னி அல்லது தக்காளி சாஸ் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More