Tuesday, January 8, 2013

குடைமிளகாய் உசிலி


தேவையான பொருட்கள்

வெங்காயம்–2
குடை மிளகாய்-3
பச்சைமிளாகாய்-4
பூண்டு-10 பல்
புளிக்கரைசல்-1கப்
தேங்காய் விழுது -1/2 கப்
பொட்டுக்கடலை மாவு-4 ஸ்பூன்


செய்முறை;-
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் பூண்டு பச்சைமிளகாய் போட்டு வணக்கவேண்டும்.
வெங்காயத்தை சேர்த்து வணக்க வேண்டும். நன்றாக வணங்கியவுடன் குடை மிளாகாய் சேர்க்கவும்.
உப்பு மஞ்சள்தூள் போடவும். மூடி வைக்கவும். குடைமிளகாய் வெந்தவுடன் கரைத்துவைத்த புளியை
ஊற்றவும்.(சப்பாத்திக்கு என்றால் தக்காளிஅரைத்து வடிக்கட்டி ஊற்றவும்.) புளி கொதித்தவுடன் தேங்காய்
விழுது சேர்க்கவும். 1 டேபிள்ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும். பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.
கொத்தமல்லித்  தழையைத் தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More