Monday, December 31, 2012

வெண்டைக்காய் காரகுழம்பு



தேவையானவை :


வெண்டைக்காய் -250 கிராம்
பூண்டு -5 பற்கள்        கார குழம்பு
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
புளி -- 1 உருண்டை
வெங்காயம் -- 10
தக்காளி -- 1
நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
வெந்தயம்  -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை --
அரைத்த தேங்காய் -- 3 ஸ்பூன்
சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன்


 செய்முறை :

  * தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்
   தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும்

* வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து       வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும்

* வெங்காயம் போட்டு  வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும்.
   நன்கு வதக்கியதும்  சாம்பார் பொடி,உப்புவெண்டைக்காய்போட்டுநன்குகிளரவும்
   நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி  ஊற்றவும்.

* பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில்    வைக்கவும்.இதில் மிளகு சீரகம் பொடி போட்டதினால் தனியாக தேங்காய்         சேர்த்துள்ளேன்

* பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்
  சுவையான  வெண்டைக்காய் காரகுழம்புரெடி

குறிப்பு:

வெண்டைக்காய் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More